Apr 11

கிண்ணியா நகரசபையை கைப்பற்றியது ஐக்கிய தேசியக் கட்சி

திருகோணமலை கிண்ணியா நகரசபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ள நிலையில், தவிசாளராக அக்கட்சியின் உறுப்பினர் எஸ்.எச்.எம் நளீம் தெரிவுசெய்யபட்டுள்ளார்.

தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுக்கான அமர்வு இன்று காலை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த அமர்வின் போது, அதிக வாக்குகள் பெற்ற எஸ்.எச்.எம். நளீம் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுக்கிடையில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வுக்கமைய புதிய தவிசாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.