Apr 11

பிரான்ஸில் பல்கலைக்கழக ஆர்ப்பாட்டங்களுக்கு பேராசிரியர்களின் ஆதரவு!

இன்று நாடெங்கிலும் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் புதிய தேர்வு சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அடங்கலாக மொத்தம் 400 பேர் பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து போராடி வருகின்றனர். மேலும் இவர்கள் எல்லோரும் சேர்ந்து “அபத்தமான சீர்திருத்தங்களுக்கு” எதிராக ஒரு பகிரங்கக் கடிதத்தை வெளியிட்டுள்ளனர்.France professors support university student

மார்ச் 9 அன்று அறிவிக்கப்பட்ட புதிய Réussite des Étudiants (ORE) என்று அழைக்கப்படும் சட்டம், செப்டெம்பர் 2018 முதல் அமுலுக்கு வரவிருக்கிறது. இதில் பல சிக்கலான புதிய ஒழுங்கு முறைகள் நடைமுறைக்கு வரவிருக்கின்றன.

அரசாங்கம் “தேர்வு செய்யப்பட வேண்டிய தகுதி இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்க முடியும்” என்று கூறுகிறது. மற்றும் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களின் தொகையை குறைக்கவும் முயற்சிக்கிறது.

இது தற்போதைய Baccalaureate தகுதிவாய்ந்த எல்லா மாணவர்களையும் (பரீட்சையில் 10/20) பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கும் அமைப்பிற்கு முரணாக உள்ளது. இதனாலேயே ஆர்ப்பாட்டத்தை தொடங்கியதாக கூறப்படுகிறது.

இந்த மாணவர்களின் போராட்டங்களில் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்துள்ளனர்.

இன்று, 425 பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து அபத்தமான சீர்திருத்தத்தை கண்டனம் செய்வதாகவும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் FranceInfo க்கு ஒரு கடிதத்தை அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.

இந்த கடிதத்தில் “பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை அனைத்து வகைகளையும் நாங்கள் நிராகரிக்கிறோம்” என்றும் புதிய சட்டம் “பாசாங்குத்தனமானவை” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.