Apr 11

ஹாக்கி வீரர்களின் பேருந்து விபத்து – உண்மை நிலையை கண்டறிய விஷேட பொலிஸ் குழு

சாஸ்கட்சுவான் மாகாணத்தின் டிஸ்டேல் பகுதியில் இடம்பெற்ற ஹாக்கி விளையாட்டு வீரர்களின் பேருந்து விபத்து தொடர்பில், பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த விபத்து எவ்வாறு நேர்ந்தது என்பது மர்மமாகவே உள்ள நிலையில், இதை கண்டறிய விஷேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் (சனிக்கிழமை) ஹம்போல்ட் பிராங்க்ஸ் ஐஸ் ஹாக்கி கனிஷ்ட அணியை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்கள் 10 பேர் அணி வீரர்கள் எனவும் ஏனையோர் முறையே, 2 பயிற்றுவிப்பாளர்கள், பேருந்து சாரதி, சுயாதீன புள்ளி விபரவியலாளர் மற்றும் ஒளிபரப்பாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

29 பேர் குறித்த பேருந்தில் பயணித்திருந்த நிலையில், 14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.