Apr 11

பிரான்ஸில் கடத்தப்பட்ட 17 வயதுடைய இலங்கைப் பிரஜை!

Val-de -Oise இல் மூன்று வாரங்களின் முன்னர் கடத்தப்பட்ட 17 வயதுடைய இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இளம்பெண் ஒருவர் மீட்கப்பட்டுளார். இக் கடத்தல் தொடர்பாக அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.Srilankan girl kidnapped 28 year relation

குறித்த பெண்ணை கடந்த மார்ச் 20 ஆம் திகதி Goussainville நகரில் வைத்து மூன்று நபர்கள் காருக்குள் வலுக்கட்டாயமாக இழுத்து கடத்தியுள்ளனர். இதனால் காவற்துறையில் புகார் கொடுக்கப்பட்டதுடன், காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இதன் பின்னர், குறித்த பெண் கடந்த ஏப்ரல் 9 அன்று வீட்டுக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண்ணை விசாரித்த காவற் துறையினர் அவரின் உடலில் எவ்வித காயங்களும் இல்லை என உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக குறித்த பெண்ணின் 28 வயதுடைய உறவினர் ஒருவரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.