Apr 07

தடைபட்ட மின்சாரம் சீர்செய்யப்பட்டு வருவதாக ஹைட்ரோ நிறுவனம் தெரிவிப்பு

பலத்த காற்று காரணமாக ரொறன்ரோ நகரின் பல பாகங்களிலும் தடைபட்ட மின்சாரம் தற்போது சீர்செய்யப்பட்டு வருவதாக ரொறன்ரோ ஹைட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

 (புதன்கிழமை) பல்லாயிரக்கணக்கானோர் இந்த மின் துண்டிப்பினால் பாதிக்கப்பட்ட நிலையில், ஹைட்ரோ பணியாளர்கள் மேற்கொண்ட திருத்த வேலைகளினால் நேற்று வரை 110 பேருக்கான மின் விநியோகங்கள் சீர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் காற்று வேகமாக வீசிக் கொண்டிருந்தமையால் தமது பணியாளர்கள் பலத்த சிரமத்தை எதிர்நோக்கியதாகவும் ஹைட்ரோ கூறியுள்ளது.

இந்த காற்றினால் கிட்டத்தட்ட 21,000 வாடிக்கையாளர்களுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததாக ரொறன்ரோ ஹைட்ரோ முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.