Apr 07

பிரான்ஸின் இதமான காலநிலையை அனுபவிக்க வாருங்கள்!

இனி வரும் நாட்களில் நீங்கள் வீட்டிற்குள் இருப்பதை விட்டு வெளியே வந்து நல்ல இதமான காலநிலையை அனுபவிக்கலாம். பிரான்ஸ் கடுமையான வெள்ளம் மற்றும் கடுமையான பனிப்பொழிவின் பின்னர் வசந்தகாலத்தை வரவேற்கிறது. 

மேலும் இவ் வெப்பநிலை ஏப்ரல் மாதத்தைவிட மே மாதம் அதிகரிக்கும்.

இவ் வசந்த காலத்தில் நாட்டின் சில பகுதிகளில் 24 மணி நேரத்திற்குள் வெப்பநிலை இரட்டிப்பாக அமையும்.

பிரான்ஸின் தேசிய வானிலை மையமான Meteo பிரான்ஸின் கருத்துப்படி.இன்று, பிரான்ஸில் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் சூரியன் பிரகாசிப்பதோடு, பல இடங்களில் சராசரி வெப்பநிலையை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,

அதாவது பிரான்ஸில் சில இடங்களில், வெப்பநிலை 24 மணி நேரங்களில் (அல்லது கிட்டத்தட்ட) இரட்டிப்பாகும்.

மேலும், பிரான்ஸின் மேற்குப் பகுதிகளில் மழை எதிர்பார்க்கப்படுகிறது.