Apr 07

6,22,161க்கும் அதிகமான கனடியர்களின் முகநூல் தரவுகள் கசிவு

கனடாவில் சுமார் 6,22,161 க்கும் அதிகமான கனடியர்களின் முகநூல் தரவுகள், கசிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூல் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் பயனாளிகளின் தனிப்பட்ட தரவுகள் கசிந்துள்ள நிலையில், இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக அரசியல் நடவடிக்கைகளுக்காக செயற்பட்ட நிறுவனம் ஒன்றுக்கு, முறையற்ற வகையில் கேம்பிரீட்ஜ் அனலிட்டிக்கா நிறுனத்திற்கு, செயலிகள் ஊடாக குறித்த தகவல்கள்களை பகிர்ந்துள்ளதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக சுமார் 87 மில்லியன் முகநூல் பாவனையாளர்களின் தரவுகள் கசிந்துள்ளதாகவும், அவற்றுள் அதிகளவாக 82 சதவீதமானவை அமெரிக்க முகநூல் பாவனையாளர்களுடையது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.