Apr 06

தமிழர் தேசமும், இலங்கையில் தமிழினப் படுகொலை சர்வதேச மாநாடு

ஒட்டாவாவில் எதிர்வரும் மே மாதம் இடம்பெறவிருக்கின்ற தமிழர் தேசமும், இலங்கையில் தமிழினப் படுகொலை, நீதிக்கான தேடல் மற்றும் தமிழர் தேசத்தை மீளக் கட்டியெழுப்புதல் சர்வதேச மாநாட்டுக்கு நிதி சேகரிக்கப்பட்டு வருகின்றது.

ஈதன் முதலாவது மாநாடு ஓட்டாவாவில் 1999இல் நடைபெற்றது. அதன் பின்னரான காலங்களில் தமிழ் மக்கள் மிகவும் கொடுமையான வரலாற்றைக் கடக்க வேண்டியிருந்தது.

தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தில் இன்றைய நிலையிலிருந்து அடுத்த பத்தாண்டு காலத்துக்கான விடயங்களை சர்வதேச ரீதியில் அறிவியல் தளத்தில் நிறுவி வலுப்படுத்த வேண்டியமையும், இளைய சமூகத்தை இணைத்தவாறு இம்மாநாட்டின் தொகுப்புக்களை அடுத்த சந்ததியினருக்க கிடைக்க வழி செய்வதுமாகவே இம் மாநாடு முக்கியத்துவம் பெறுவதாக அமைப்புக்குழுவின் தலைவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இம்மாநாட்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் இலங்கை மீதான முன்னெடுப்புக்களுக்கான அழுத்தங்களை ஏற்படுத்தும் வகையில், இம்மாநாட்டில் கருத்தமர்வுகள் நடைபெறும் அவர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான மாநாட்டின் முக்கியத்துவத்தை மக்களிடம் முன்னெடுத்துச் செல்வதினூடாக மாநாட்டை வெற்றிபெறச் செய்வதில் ஊடகங்களும் பங்காளர்களாக இணைந்து கொள்ள வேண்டும் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

இம்மாநாட்டில் உலகில் பல நாடுகளில் இருந்து அறிவியலாளர்கள், புலமையாளர்கள் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை மற்றும் தமிழ் மக்கள் சுயநிர்ணயத்துக்கு உரித்துடைய மக்கள் என்கின்ற விடயங்களில் தமது நிலைப்பாடுகளை ஆய்வுகள், ஆதாரங்களுடன் முன்வைக்கவுள்ளனர்.

இப் புலமைசார், அறிவியல் ஆய்வானது தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதாக அமையும்.