Apr 06

உணவை வீணாக்குவதில் முதலிடம் பெற்ற கனடா நாடு!

கனடா நாட்டவர் உணவை வீணாக்குவதில் முதலிடம் பெற்றுள்ளனர்.

உலகிலே அதிக உணவை வீணாக்குவதில் கனடா நாட்டவர் முதலிடம் என்று சொல்லும் அளவிற்கு உள்ளதாக சுற்றுச்சூழல் கூட்டுறவு மாநகராட்சி கமிஷன் தெரிவித்துள்ளது. மேலு

ம் பண்ணை ஒன்றிலிருந்து சமைத்து மேசைக்குள் வருவதற்குள், ஒவ்வொரு கனடா நாட்டவரும் ஆண்டொன்றிற்கு சுமார் 400 கிலோ கிராம் உணவை வீணாக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி சாப்பிட்டபின் மீதம் விடும் உணவின் தொகையும் கனடாவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பும் உணவை வீணாக்குவதை கனடாவில் குறைக்குமாறு கேட்டுள்ளது.

இதனடிப்படையில் ஒருவேளை உணவின்றி பல நாடுகளில் மக்கள் காணப்படுகையில், கனடாவில் உணவை வீணாக்குவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.