Apr 04

ஸ்காபரோ : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

ஸ்காபரோ பகுதியில் மருந்து செலுத்தும் ஒரு ஊசி 30 பேருக்கு பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரொரன்ரோவின் ஸ்காபரோ பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற சமூக நிகழ்வொன்றில், பொதுமக்களிடம் இருந்து இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, இரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவு பரிசோதிக்கப்பட்டது.

குறித்த இந்த சந்தர்ப்பத்தில் ஒரே ஊசி 30 பேர் வரையானவர்களுக்கு பயன்படுத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை ரொரன்ரோ பொது சுகாதார அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் முற்பாதுகாப்பு நடவடிக்கையாக மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.