Apr 04

ஆர்கனிக் விவசாயம் மேம்படும் சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் 25% ஆன நிலத்தில் விவசாயம் செய்யப்படுகிறது. அதாவது சுமார் 1 மில்லியன் ஹெக்டேர் நிலம் தான் இந்த 25% ஆகும். இந்த 25% வீதத்தில் 13.5% ஆனவை ஆர்கனிக் முறை விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது, அதன் நில அளவு, 142,000 ஹெக்டேர் ஆகும்.

ஆர்கானிக் வேளாண்மை செய்யப்படும் மாகாணங்களில் குறைவான விவசாயம் செய்யும் மாகாணம் Appenzell Innerrhoden (5.2%) ஆகும். மிக அதிகமான ஆர்கானிக் வேளாண்மை செய்யப்படும் மாகாணம் Graubunden (63%) ஆகும்.

மிகச் சிறியளவு மாவட்ட ரீதியில் ஆர்கானிக் விவசாய பகுதிகள் அதிகமாக உள்ளன. இவ்வாறு மிக அதிக ஆர்கானிக் வேளாண்மை கொண்ட மாவட்டம் Graubunden மாகாணத்தில் உள்ள Bernina (83%) மாவட்டமாகும், மற்றும் குறைந்தபட்ச ஆர்கானிக் வேளாண்மை கொண்ட மாவட்டம், Vaud மாகாணத்தில் உள்ள Ouest Lausannois (0%) மாவட்டம் ஆகும்.

பல்வேறு விவசாய பொருட்கள் பல்வேறு உயரத்தில் வளர்கின்றன. உயரம் குறைந்தால், பணியாட்கள் தேவைப்படாத வேளாண் வேதிப்பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கும்.