Apr 04

மதுபான விற்பனை மீதான வரி அதிகரிப்பு

பணவீக்கத்தின் அடிப்படையில் மது விற்பனை மீதான கலால் வரியை அதிகரிக்கும் நோக்கில், மதுபான விற்பனை மீதான வரியை, கூட்டாட்சி அரசாங்கம் அதிகரித்துள்ளது.

இதன்படி, மதுபானம் விற்பனை மீதான வரி ஏப்ரல் முதலாம் திகதி முதல் 1.5 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த அறிவிப்பானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.5 வீதம் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்த வரியானது 2 வீதத்தால் அதிகரிக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த வரி விதிப்பிற்கு பெரும்பாலான கனடியர்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளதோடு, இந்த வரி விதிப்பினை மீள் பரிசீலனை செய்ய வேண்டுமெனவும் கோரியுள்ளனர்.