May 21

பிரதமர் எங்களை மட்டும் சந்திக்க மறுப்பது ஏன்? ஸ்டாலின் கேள்வி

காஞ்சிபுரம் தண்டலம் பகுதியில் கோயில் குளம் தூர்வாரும் பணியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். பின்னர் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது : தமிழக மக்களின் குடிநீர் பிரச்னை பற்றி தமிழக அரசு கவலைப்படதாக தெரியவில்லை. தமிழக நீர் ஆதாரங்களை தூர்வார அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக மக்கள் திமுக.,வை தான் ஆளும்கட்சியாக பார்க்கிறார்கள். நாங்கள் குளங்களை தூர்வாருவதை சிலர் விமர்சனம் செய்கிறார்கள். அதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. அது எங்களுக்கு இன்னும் ஊக்கத்தையே தருகிறது. 

ஓபிஎஸ்.,ஐ சந்திக்க நேரம் ஒதுக்கும் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவரான என்னை சந்திக்க மறுப்பது ஏன்? விவசாயிகளை சந்திக்க மறுக்கும் மோடி, ஓபிஎஸ்.,சை மட்டும் சந்தித்தது ஏன்? எந்த பதவியிலும் இல்லாத ஓபிஎஸ்.,க்கு பிரதமர் முக்கியத்துவம் அளிப்பது ஏன்? விவசாயிகள் பிரச்னை குறித்து சந்திப்பதற்காக எனக்கு பிரதமர் மோடி நேரம் ஒதுக்கவில்லை. ஓபிஎஸ்க்கு நேரம் ஒதுக்கும் பிரதமர் மோடியால் எனக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.