Apr 03

கதவில் புலிகளின் தலைவர் உருவம்: வியப்பில் மக்கள்..!

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் திருவுருவத்தை தனது வீட்டின் பிரதான வாயில் கதவில் செதுக்கி வைத்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ”சதீஸ்குமார்” இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

அவர் தான் அண்மையில் புதிதாக கட்டிய வீட்டின் பிரதான வாயில் கதவிற்கு பிரபாகரனின் உருவத்தை செதுக்கியுள்ளார்.

செதுக்கப்பட்டுள்ள பிரபாகரனின் உருவப்படத்திற்கு கீழே, விடுதலைப்புலிகளின் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது.

இவருடைய வீட்டின் புதுமனைப் புகுவிழாவிற்கு வருகை தந்தோர் கதவில் பிரபாகரனின் உருவத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்ததோடு, புகைப்படங்களும் எடுத்துக் கொண்டதாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் ‘சதீஸ்குமார்”.