May 21

இந்தியர்களுக்கான எச்1-பி விசா எண்ணிக்கை குறையாது: நிர்மலா சீதாராமன்

கடுமையான விதிமுறைகள் இருந்தாலும், இந்தியர்களுக்கான எச் 1 பி விசா எண்ணிக்கை குறையாது என்று மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு எச்1பி விசா வழங்கும் நடைமுறைகளில் அமெரிக்கா கட்டுப்பாடுகளை அதிகரித்ததுள்ளது. இதனால், இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினரை அதிக அளவில் பணியில் அமர்த்த அங்குள்ள ஐடி நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. 

இந்நிலையில், எச்1பி விசா விவகாரத்தில் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் அச்சம் அடைய தேவையில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

விதிமுறைகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டாலும், ஆண்டுதோறும் இந்திய ஊழியர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் எச்1பி விசா எப்போதும் போல் கிடைக்கும் என்றார். மேலும், இந்த எண்ணிக்கை குறையாது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.