Apr 02

மொன்றியலில் சிக்கியிருந்த அமெரிக்க போர்க்கப்பல் பயணத்தை தொடங்கியது

மிகப்பெரிய நகரான மொன்றியலில் கடந்த கிறிஸ்மஸ் மாதம் முதல் சிக்கிக் கொண்டிருந்த அமெரிக்க போர்க் கப்பல், சொந்த நாட்டை நோக்கி மீண்டும் தமது பயணத்தை தொடங்கியது.

குறித்த அமெரிக்க போர்க்கப்பலானது நேற்று  பயணத்தை ஆரம்பித்ததாக மொன்றியல் துறைமுக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கடும் பனி காரணமாக குறித்த போர்க்கப்பலின் பயணம் தடைப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து காலநிலை சீராகும் வரை மொன்றியலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் நேற்று தனது பயணத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.