Apr 02

கனடாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டிற்கு ஆர்வலர்கள் அதிருப்தி

கனடாவில் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள துப்பாக்கி கொள்வனவு மற்றும் விற்பனையின் போதான கட்டுப்பாடுகள் குறித்து, அல்பர்டாவிலுள்ள துப்பாக்கி ஆர்வலர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

கனடாவில் மிக பிரமாண்ட முறையில் நடைபெறும் துப்பாக்கி கண்காட்சி நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. குறித்த நிகழ்வில் விற்பனையாளர்கள், பார்வையாளர்கள் என ஆயிரக் கணக்கானோர் வருகை தந்திருந்தனர்.

அமெரிக்காவை தொடர்ந்து கனடாவில் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள துப்பாக்கி பாவனை கட்டுப்பாடு குறித்த விடயமே, நேற்றைய நிகழ்வில் கலந்துக் கொண்டவர்களின் முக்கிய பேசு பொருளாக விளங்கியது.

கனேடிய துப்பாக்கி விற்பனையாளர்கள் துப்பாக்கி இருப்பு மற்றும் விற்பனை ஆகியவற்றின் 20 ஆண்டு பதிவை பராமரிக்க வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.