May 21

தோனி மட்டுமல்ல இவர்களும் தான் காரணம் : காட்டி கொடுத்த ஸ்டீவ் ஸ்மித்

ஐபிஎல் இறுதிப்போட்டி வரை புனே அணி முன்னேறுவதற்கு இவர்கள் எல்லாம் தான் காரணம் என பெரிய பட்டியலை, அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

10வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 5ல் தொடங்கி நடைப்பெற்று வருகின்றது. இதன் லீக் போட்டி, பிளே ஆஃப் போட்டிகள் முடிந்து இன்று ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இறுதிப்போட்டியில் சந்திக்கின்றனர்.இறுதிப்போட்டி வரை முன்னேறியதற்கு இவர்கள் எல்லாம் தான் காரணம் என பலரின் பெயரை புனே அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

ராகுல் திரிபாதி, வாசிங்டன் சுந்தர் போன்ற இளம் வீரர்களால் புனே அணி ஜொலிக்கின்றது. அதோடு, எம் எஸ் தோனி, ரஹானே, பென் ஸ்டோக் போன்ற அனுபவ வீரர்கள் புனே அணிக்கு வலுசேர்த்தனர்.

திரிபாதி:

புனே அணிக்காக 13 போட்டியில் 308 ரன்கள் அடித்து, ஸ்மித்க்கு அடித்தபடியாக உள்ள திரிபாதி, எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக உள்ளார்.

வாசிங்டன் சுந்தர் :

ஸ்டோக் வெளியேறியதால் அணியில் சேர்க்கப்பட்ட வாசிங்டன் சுந்தர் மும்பைக்கு எதிரான பிளே ஆஃப் சுற்றில் 3 விக்கெட் எடுத்து முதல் அணியாக புனேவை இறுதிப்போட்டிக்கு முன்னேற வைத்தார்.

பயிற்சியாளர் பிளமிங்:

புனே அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் உடன் பணியாற்றுவதில் மிக பெருமையாக உள்ளது. பல்வேறு தருணங்களில் அணியின் வெற்றியை நோக்கி கொண்டுசெல்ல உறுதுணையாக இருந்துள்ளார்.

தோனி:

தோனியை பற்றி சொல்லவதற்கு எதுவும் இல்லை. அது கிரிக்கெட் தெரிந்த அனைவருக்கும் தெரியும். அவர் ஒரு ராக் ஸ்டார். அவரின் உறுதுணை எனக்கு பக்க பலம் என தெரிவித்துள்ளார்.

இப்படி ஸ்டீவ் ஸ்மித் இந்திய அணி வீரர்களின் திறமையை உலகிற்கு காட்டி கொடுத்துள்ளார்.