Mar 31

ஈஸ்ட்டர் விடுமுறை! - போக்குவரத்து நெரிசல்!

ஈஸ்டர் விடுமுறையை முன்னிட்டு, இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை நாடுமுழுவதும் வீதிகளில் கணிசமான நெரிசல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதி போக்குவரத்து கண்காணிப்பாளர்களான Bison Futé வெளியிட்ட தகவலின் படி, இன்று சனிக்கிழமை வெளிச்செல்லும் வீதிகளில் நாடுமுழுவதும் கணிசமான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு, நாடு முழுவதும் பச்சை நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Brittany, Pays-de-la-Loire, Normandy, Center-Val-de-Loire மற்றும் Auvergne-Rhône-Alpes ஆகிய மாகாணங்களுக்கு மட்டும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய நாளில், இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்குள் A10 வீதி போக்குவரத்து நெரிசல் கொண்டதாகவும், காலை 8 மணியில் இருந்து மாலை 4 மணிவரை வீதியில் பயணப்படுவதை தவிர்க்கவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர, நாளை ஞாயிற்றுக்கிழமையும் தேசிய அளவில் பச்சை நிற எச்சரிக்கையும், நாளை மறுநாள் திங்கட்கிழமை நாடு முழுவதும் உள் செல்லும் மற்றும் வெளிச்செல்லும் வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவும் அன்றைய நாளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.