Mar 31

கனடாவில் 66 பேரில் 1 குழந்தைக்கு ஆட்டிஸம்: ஆய்வில் தகவல்

கனடா நாட்டில் 66 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை என்கிற விகிதத்தில் ஆட்டிஸ நோய்க்கு ஆளாவது சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.கனடாவின் பொது சுகாதார அமைப்பு நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டது.

அதில், கனடாவில் 5 முதல் 17 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 66 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை ஆட்டிஸம் எனும் மன இறுக்க நோயால்(Autism Spectrum Disorder- ASD) பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளின் சதவிகிதம் நான்கு முதல் ஐந்து மடங்கு அதிகமாக உள்ளதும் தெரியவந்துள்ளது.

இந்நோயை பற்றி புரிந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கும், அதன் குடும்பங்களுக்கும் உதவும் வகையில் அர்த்தமுள்ள திட்டங்கள் மற்றும் சேவைகளை உருவாக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அதிகாரியான மருத்துவர் Theresa Tam தெரிவித்துள்ளார்.

குறித்த ஆய்விற்கு மொத்தம் ஆறு மாகாணங்களும், ஒரு பிரதேசமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் அதிகபட்சமாக Newfoundland மற்றும் Labrador-ல் 57 குழந்தைகளுக்கு ஒன்று எனவும், Yukon-ல் 126 குழந்தைகளுக்கு ஒன்று எனவும் இதன் சதவிகிதம் உள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நிதி வரவு செலவு திட்ட தீர்மானத்தில் ASD பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கும் அவர் குடும்பங்களுக்கும் மற்றும் அவர்களுக்கான தகவல், வளங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை மற்றும் சமூகம் சார்ந்த திட்டங்களுக்கு 20 மில்லியன் டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே 10 ஆண்டுகள் முன்னரே செனட் கமிட்டியில் ஆட்டிஸம் குடும்பங்களின் நெருக்கடி உணர்ந்து Pay Now or Pay Later என்றொரு விஷயத்தைக் கோரியிருந்தது. இந்த அறிக்கையை ஆட்டிஸம் ஆலோசனைக்குழுவும் வரவேற்றுள்ள நிலையில், இதுகுறித்து விழிப்புணர்வு மக்களிடம் வேகமாக பரவி வருவதாகவும் தெரிவித்துள்ளது.