Mar 31

ஐஸ் கிரிம் கடையின் பெயரால் புதிய சர்ச்சை?

ரொறொன்ரோவில் அமைந்துள்ள மிகப் பிரபல்யமான ‘ஸ்வீட் ஜீஸஸ்’ ஐஸ் கிரிம் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தின் பெயர், கிறிஸ்தவர்களின் கடவுளின் பெயரான யேசுவின் பெயரை அவமதிப்பதாகவும், கிளர்ச்சியை தூண்டுவதாகவும் அமைந்துள்ளதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு நிறுவனத்தார் பயன்படுத்திய சந்தைப்படுத்தல் படங்கள் மனதை புண்படுத்த கூடியவை என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கெதிராக குறித்த மனுவில் பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ‘ஸ்வீட் ஜீஸஸ்’ ஐஸ் கிரிம் நிறுவனம் கூறுகையில்,

பெயரை மாற்றியமைக்கும் திட்டம் இல்லை. கனடாவில் ஒன்பது இடங்களில் அமைந்துள்ள குறித்த கடைகள், எதிர்வரும் ஆண்டு கனடா பூராகவும் திறக்கப்படும் என தெரிவித்துள்ளது.