Mar 31

ஒன்ராறியோ நிதிப் பற்றாக்குறை ஆறு ஆண்டுகளுக்கு நீடிக்கும் – அரசியல் வல்லுநர்கள்

குறைந்தது இன்னமும் ஆறு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என அரசியல் வல்லுநர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.

ஒன்ராறியோ மாகாணத்திற்காக 2018 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சட்டமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இவ்வாறு முன்னுரைத்துள்ளனர்.

ஒன்ராறியோ நிதியமைச்சர் சார்லெஸ் சூசாவால் அவையில் முன் வைக்கப்பட்ட குறித்த வரவு செலவுத் திட்டத்தில், சுகாதார பராமரிப்பு, குழந்தைகள் பராமரிப்பு, மூத்தோருக்கான உதவிகள் போன்ற திட்டங்களுக்காக 158.5 பில்லியன் டொலர்களுக்கான திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரவு செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகையாக 6.7 பில்லியன் டொலர்கள் காணப்படுவதாகவும், எதிர்வரும் 2025ஆம் ஆண்டு வரையிலும் வரவு செலவுத் திட்டம் சமப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் அரசியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.