May 20

அவரு அதுக்கு லாயக்கு இல்ல: ரஜினியை சீண்டும் சீமான்

நடிகர் ரஜினிகாந்த் தமிழக முதல்வராக தகுதியற்றவர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்கள் சந்திப்பின் போது ஆற்றிய உரையில், நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்ட பலரை பாராட்டிப் பேசினார். இந்நிலையில் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து சீமானிடம் கருத்து கேட்கப்பட்டது.அப்போது பேசிய சீமான், ஒரு நடிகராக ரஜினிகாந்த் அவர்களை நான் கொண்டாடுகிறேன்.

அவர் எத்தனை படம் வேண்டுமானாலும் நடிக்கட்டும், எவ்வளவு வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கட்டும். ஆனால், அவரது மனநிலைக்கு அரசியல் ஏற்றதல்ல. அதைத் தவிர வேறு எதைச் செய்தாலும் நான் வரவேற்பேன்” என்று சொல்லியுள்ளார்.