Mar 30

சுவிட்சர்லாந்தின் Valais-ல் குற்றச்செயல்கள் குறைவு

சுவிட்சர்லாந்தின் Valais- மாகாணத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் குற்றச் செயல்கள் மிகக் குறைந்தளவே இடம்பெற்றுள்ளதாக ரூபவ் வாலீஸ் மாகாண பொலிஸ் ஊடக பேச்சாளர் மார்கூஸ் ரைடர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் ரூபவ் விற்பனை உட்பட அனைத்து வகையான குற்றச் செயல்களும் மற்றைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்தளவே இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.மேலும் பொதுமக்களின் பாதுகாப்பு  மற்றும் காட்டுப் பாதை ஊடான வாகன போக்குவரத்துக்கள் என்பன எவ்விதமான அச்சநிலையும் இல்லாமல் மிகவும் திருப்தியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டுகளில் குற்றச் செயல்கள் குறைந்தளவு இடம்பெற்றுள்மைக்கு பொலிஸாருடைய 24 மணிநேர கண்காணிப்பு மற்றும் புலனாய்வுத் துறையினருடைய செயற்பாடுளும் முக்கிய காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.கடந்த வருடங்களில் வீதி போக்குவரத்து குற்றச்செயல்கள் மற்றும் விபத்துகள் என்பன மிகக் குறைந்தளவே இடம்பெற்றுள்ளன.

இனிவரும் காலங்களிலும் குற்றச்செயல்களின் எண்ணிக்கையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் பாரிய பொறுப்பு பொலிஸாரிடமே உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.