Mar 30

தானியங்கி இயந்திரங்களால் பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

நாட்டின் தொழில் துறையில் தானியங்கி இயந்திரங்களால் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் அடுத்த பத்தாண்டுகளில் பணியாளர்களில் பாதிபேரின்மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என றோயல் பேங் ஆஃப் கனடா தெரிவித்துள்ளது.

எனினும், இதனை அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு செய்தியாக பார்க்காமல் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு நேர்மறை செய்தியாகவே பார்க்கப்படவேண்டும் எனவும் றோயல் பேங் ஆஃப் கனடா அறிவுறுத்தியுள்ளது.

எதிர்காலத்தில் பல வேலைவாய்ப்புகள் இருக்கும், ஆனால் அவற்றை செய்வதற்கு தேவைப்படும் திறன் பெருமளவில் மாற்றத்திற்குள்ளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த நான்கு ஆண்டுகளில் கனடாவின் பொருளாதாரம் 2.4 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்க இருக்கும் நிலையில் அவை அனைத்துமே இன்றைய மாணவர்கள் கற்கும் பாடங்களிலிருந்து வேறுபட்டிருக்கும். எனவே பாடத்திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படவேண்டியது அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.