May 20

ஐஸ் உருகி மூழ்கிய ‛உலக விதை வங்கி'

இயற்கை பேரிடர்களில் அல்லது மனிதர்களால் ஏற்படும் பேராபத்தினால் மனித இனம் உணவில்லாமல் தவிப்பதை தடுப்பதற்காக நார்வே அரசு மற்றும் விவசாய அமைப்பு சார்பில், உலக விதை வங்கி அமைக்க திட்டமிடப்பட்டது. 

இதற்காக நார்வேயின் ஸ்பிட்பெர்ஜென் தீவில், கடந்த 2008 ம் ஆண்டு சுரங்கம் அமைக்கப்பட்டு அதில் விதைகள்அட்ங்கிய பெட்டிகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தன.

இந்த விதைகள் -18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், உலக வெப்பமயமாதல் காரணமாக, அங்கு உருகிய பனிக்கட்டிகள் விதைகள் வைக்கப்பட்டிருந்த சுரங்கத்திற்குள் சென்றது. அங்கு பெய்த கனமழை காரணமாக தண்ணீரும் சேர்ந்து சென்றது. இருப்பினும், அந்த விதைகள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளை தண்ணீர் பாதிக்கவில்லை.

இதனால் தற்போதைக்கு அந்த விதைகள் பாதுகாப்பாக உள்ளது. இருப்பினும், எதிர்பாராவிதமாக நடந்த இந்த இயற்கை சீற்றமானது, பெரிய ஆபத்து வந்தால், மனிதர்களுக்கு உணவு கிடைப்பதில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

விஞ்ஞானிகள், தற்போதைய ஆண்டும் பருவநிலை மாற்றம் காரணமாக இந்த வருடமும் அதிக வெப்பம் தொடர்கிறதா அல்லது அதிகரிக்கிறதா என்பதை கண்காணிக்க முடிவு செய்துள்ளனர். கடந்த 2016 இறுதியில், விதை வைக்கப்பட்டிருந்த பகுதியில் வெப்பநிலையானது சராசரியை விட 7 டிகிரி செல்சியஸ் அதிகம் பதிவானது.

இதனையடுத்து விதையை பாதுகாக்கும் வகையில் விஞ்ஞானிகள் தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அந்த சுரங்கத்திற்ககுள் தண்ணீர் புகாத வகையில், அகழிகள் அமைத்து வருகின்றனர்.இதன் மூலம் அங்கு வரும் தண்ணீர் இதன் வழியாக கடத்தப்படும்.

அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்னணு சாதனங்கள் வெப்பத்தை உருவாக்குவதால், அதனையும் அகற்றினர். வெள்ளம் வந்தால் அதனை அகற்றும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக விஞ்ஞானி ஆஸ்சிம் கூறியதாவது: அந்த அறைக்குள் சென்ற தண்ணீர், பனிக்கட்டியாக உறைந்து போனது. இதனால், அங்கு சென்றால் பனிப்பாறை உருவாகியுள்ளது போல் உள்ளது.

இந்த விதையை 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறோம். அங்கு பிரச்னைகளை குறைத்து, அனைவருக்கும் உணவு என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

தற்போதைய எங்களது கேள்வி, வெப்பநிலை மாற்றம் இதோடு நிற்குமா அல்லது நீளுமா என்பதே. இவ்வாறு அவர் கூறினார்.