Mar 30

மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு

மோட்டோரோலா நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட வலைத்தளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் குறைக்கப்பட்ட விலையில் மோட்டோ ஸ்மார்ட்போன்களை வாங்கிட முடியும். 

மோட்டோ ஃபெஸ்ட் சேல் சலுகையின் கீழ் புதிய விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின் படி மோட்டோ இ4 பிளஸ், மோட்டோ ஜி5எஸ் பிளஸ், மோட்டோ X4 மற்றும் மோட்டோ இசட் 2 பிளே உள்ளிட்ட ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.மோட்டோ ஸ்மார்ட்போன் விலை குறைப்பு விவரங்கள் பின்வருமாறு..,

மோட்டோ இசட் 2 பிளே ஸ்மார்ட்போனின் உண்மை விலையில் இருந்து ரூ.6,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.21,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதலாக ரூ.16,000 வரை தள்ளுபடி பெற முடியும். 

மோட்டோ X4 (3ஜிபி + 32ஜிபி) ஸ்மார்ட்போனினை வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.19,000 வரை தள்ளுபடி பெற முடியும். இத்துடன் மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனின் விலையில் இருந்து ரூ.2000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.12,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த சலுகை மோட்டோ ஹப்களிலும் வழங்கப்படுகிறது.

மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போனின் உண்மை விலையில் இருந்து ரூ.500 தள்ளுபடி மற்றும் வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதலாக ரூ.9,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதே சலுகையும் மோட்டோ ஹப்களில் வழங்கப்படுகிறது.

மோட்டோ ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டது மட்டுமின்றி வட்டியில்லா மாத தவணை முறை வசதி, தேர்வு செய்யப்பட்ட நிதி நிறுவனங்கள் வழங்கும் வட்டியில்லா சலுகைகள் வழங்கப்படுகிறது. மோட்டோரோலா அறிவித்து இருக்கும் புதிய விலை குறைப்பு ஸ்டாக் இருக்கும் வரை பிளிப்கார்ட், அமேசான், ஆஃப்லைன் விற்பனை மையங்கள் மற்றும் மோட்டோ ஹப்களில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.