Mar 29

100 வயது பழமையான மரத்தை திருமணம் செய்யும் இரு பெண்மணிகள் : வினோதமான திருமணம்

அமெரிக்காவில் 100 வயதான மரத்தை வெட்டவிடாமல் தடுக்க அதை இரண்டு பெண்கள் சேர்ந்து திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

ப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் கரீன் கூபர், இவர் தோழி தனா போகில்சங்.

இவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு பூங்காவின் அருகில் 100 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று உள்ளது.

அந்த மரம் அங்கு இடையூறாக இருப்பதாக நினைக்கும் அதிகாரிகள் மரத்தை வெட்ட முடிவெடுத்துள்ளனர்.இதற்கு அந்த பகுதி மக்களிடையே எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் 50 பேர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

ஆனாலும் அதிகாரிகள் தங்கள் முடிவிலிருந்து பின் வாங்காத நிலையில் கூபரும், தனாவும் ஒரு விசித்திரமான முடிவை எடுத்தனர்.

அதன்படி குறித்த மரத்தை திருமணம் செய்து கொள்ள இருவரும் தயாரானார்கள்.

பின்னர் இரண்டு பெண்களும் புத்தாடை அணிந்து கொண்டு கேக் கொண்டு வந்தார்கள், இதையடுத்து மரத்தை திருமணமும் செய்து கொண்டார்கள்.இதன் பின்னர் கூபர் கூறுகையில், இனி மரத்தை வெட்ட முடியாது, அப்படி வெட்டினால் நான் விதவையாகி விடுவேன் என கூறியுள்ளார்.