Mar 29

சுவிட்சர்லாந்தில் ஐவரில் ஒருவர் ஒவ்வாமை நோயால் பாதிப்பு

சுவிட்சர்லாந்தில் ஐவரில் ஒருவர் ஒவ்வாமை நோயினால் பாதிப்புக்கு உள்ளாகுவதாக சுவிஸ் ஒவ்வாமை மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 22 ஆம் திகதி சுவிஸ் தேசிய ஒவ்வாமை தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வாமை என்பது ஒரு மிக அரிதாகவே காணப்பட்டது.

ஆனால் தற்போது மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டாலே பரபரப்பாக பேசப்படும் விடயமாக ஒவ்வாமை உள்ளது.ஒவ்வாமைக்கு முக்கிய காரணிகளாக வசந்தகாலப் பூக்களின் மகரந்தம்பூச்சிகளின் தூசிகள் மற்றும் விலங்குகளின் உமிழ்நீர் போன்றவை அமைகின்றது.இந்த காரணிகளுக்கு எதிராக எமது உடலில் நோய் எதிர்ப்புத்தன்மை குறைவடைவதே ஒவ்வாமைக்கு முக்கிய காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் இந்த ஒவ்வாமையை தவிர்ப்பதற்காக ரூபவ் கர்ப்ப காலத்திலிருந்து தாய்மார் கட்டாயம் ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும், ரூபவ் குழந்தை பிறந்ததிலிருந்து குறைந்தது நான்கு மாதங்கள் தாய்பாலை கட்டாயம் கொடுக்க வேண்டும் எனவும் சுவிஸ் ஒவ்வாமை மையம் வலியுறுத்தியுள்ளது.