May 20

ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுவெடிப்பு: 2 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் கார்டெஸ் நகரில் உள்ள வங்கி ஒன்றில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 2 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் பட்ரிகா மாகாணத்தில உள்ள கார்டெஸ் நகரில் நியூ காபூல் வங்கிக் கிளை ஒன்றில் இன்று மதியம் 2.30 மணியளவில் தீவிரவாதி ஒருவன் தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தினான்.இத்தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததாகவும் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் சுகாதாதரத்துறை கூறியுள்ளது.

மேலும் ஒரு தீவிரவாதி வங்கிக்குள் வெடிபொருட்களை வீசியதாகவும் அவன் இன்னும் வங்கிக்குள்ளேயே பதுங்கியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.