Mar 28

பிரித்தானியாவுக்கு ஆதரவு – ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்தது கனடா

கனடாவுக்கான ராஜதந்திரிகளை நியமிப்பது குறித்து ரஷ்யா அனுப்பிய மூன்று விண்ணப்பங்களை கனடா நிராகரித்துள்ளது.

ரஷ்யாவின் முன்னாள் உளவாளியும் அவரது மகளும் பிரித்தானியாவில் நஞ்சூட்டப்பட்டதன் பின்னணியில் ரஷ்யா செயற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதன் பின்னணியிலேயே ரஷ்யாவின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, தமது நாட்டிலுள்ள ரஷ்ய ராஜதந்திரிகளை வெளியேற்றுவதற்கும் கனடா தீர்மானித்துள்ளது.

அந்தவகையில், ஒட்டாவாவிலுள்ள ரஷ்ய தூதரகத்திலுள்ள நால்வர் வெளியேற்றப்படவுள்ளதாக கனடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் முன்னாள் உளவாளி மற்றும் அவரது மகள் நஞ்சூட்டப்பட்ட விவகாரத்தில், ரஷ்யா மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இச்செயற்பாட்டிற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.