May 20

மைதானத்துக்கு வர சச்சினுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?: அள்ளி அள்ளி கொடுக்கும் அம்பானி!

மும்பை அணி தனது சொந்த மைதானத்தில் பங்கேற்கும் போட்டிகளுக்கு மட்டும் மைதானத்துவர சச்சின் பல கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் லீக் போட்டிகள் முழுவதுமாக முடிந்த நிலையில், பிளே ஆப் சுற்றுகளுக்கு மும்பை, புனே, ஐதராபாத், கொல்கத்தா அணிகள் தகுதி பெற்றன.பிளே ஆப் சுற்றுகளில், ஐதராபாத், கொல்கத்தா அணிகள் வெளியேறின.

இந்நிலையில் நாளை ஐதராபாத்தில் நடக்கும் பைனலில், மும்பை அணி, புனே அணியை எதிர்கொள்கிறது. இதில் பங்கேற்கும் எட்டு அணிகளில், அதிகபட்சமாக டெல்லி அணியின் பயிற்சியாளர் டிராவிட் ரூ. 4.5 கோடி சம்பளமாக வாங்குகிறார்.

ஆனால், எந்த ஒரு பயிற்சியோ அல்லது வீரர்களுடன் அதிக நேரம் செலவிடாத மும்பை அணியின் ஆலோசகரான சச்சின், மும்பை அணி தனது சொந்த மைதானமான வான்கடே மைதானத்தில் பங்கேற்கும் போட்டிகளின் போது மட்டும் மைதானத்துக்கு வர சச்சின், டிராவிட்டை விட அதிக சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.