Mar 28

சுவிட்சர்லாந்திற்கு காத்திருக்கும் வெள்ளப்பேரழிவு

வசந்த காலத்திற்காக காத்திருக்கும் சுவிட்சர்லாந்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சுவிஸ் மலைகளில் உள்ள பனியினாலும், தாழ்நிலப் பகுதிகளில் ஏற்படக்கூடிய மழைப் பொழிவினாலும் அங்குள்ள ஏரிகளும், ஆறுகளும் வரப்போகிற வசந்த காலத்தில் மிகப்பெரிய விளைவுகளைச் சந்திக்கக் கூடும் என தெரிவித்துள்ளனர்.

இவ்வருடம் வெள்ளப் பேரழிவிற்கான சாத்தியங்கள் பெருமளவில் இருப்பதாக பெர்ன் மாகாணத்தை சேர்ந்த Ueli Winzenried நிறுவனத் தலைவர் வின்சென்ர்ய்ட் மிகவும் கவலையுடன் கூறியுள்ளார்.

அதற்கு தடுப்பு முயற்சியாக ஏரிகளில் இப்போதுள்ள நீரின் அளவைக் குறைப்பதன் மூலம் உருகி வரும் பனி நீரை ஏரிகள் உறிஞ்சிக் கொள்ள வாய்ப்பிருப்பதாகவும், மேலும் கரையோரங்களில் தங்கி இருக்கும் வீடுகளின் சொந்தக்காரர்கள் தங்களது நிலவறைகளை காலி செய்வதன் மூலமும் மணல் பைகளை அடுக்கி வைப்பதன் மூலமும் வெள்ளத்தின் பிடியிலிருந்து தப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

அவர் இவ்வாறு கூறுவதன் நோக்கம் 1999 ஆம் வருடம் அதீத பனிக்காலத்தை தொடர்ந்து வந்த பெரு மழைக்கால வெள்ளம் ஏரிகளையும் ஆறுகளையும், கரைகளை உடைத்து மிகப் பெரிய பொருள் சேதத்தையும் பணச் சேதத்தையும் ஏற்படுத்தியது போல மீண்டும் நடந்து விட வேண்டாம் என்பதுதான்.

என்ன இருந்தாலும் சுவிற்சர்லாந்தை பொறுத்த வரை இது வெகு சீக்கிரமான முன் எதிர்பார்ப்பு என்பதால் 1999 ஆம் ஆண்டு வெள்ளம் போல மீண்டும் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.எனினும் 1999ம் ஆண்டைப் போன்று தற்போது வர வாய்ப்பில்லை எனக்கூறும் Vaud’s சுற்றுச்சூழல் துறை அதிகாரி, இயற்கை சீற்றங்களை அவ்வளவு எளிதில் எடைப் போட்டுவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

2000 ஆவது ஆண்டு இலையுதிர் காலத்தில், ஆறு தன் கரைகளை உடைத்து வாழ்விடங்களுக்குள் நீர் புகுந்ததால் ஏற்பட்ட பேரழிவை இன்னமும் தங்கள் ஆழ்மனதிலிருந்து அழிக்க முடியாமல் அதன் தாக்கம் இருப்பதாக Valais மாகாண மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.