Mar 11

இறுக்கட்டத்தினை அடைந்தது ரஜனியின் 2.0

ரஜனியின் 2.0 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

ரஜனி தற்போது ஷங்கர் இயக்கத்தில் 2.0படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜனிகாந்த் ஜோடியாக ஏமி ஜாக்சன் நடித்து வருகிறார்.

வில்லனாக பொலிவூட் நடிகர் அக்ஷய்குமார் நடித்து வருகிறார். லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. 

இப்படம் ஆரம்பிப்பதற்கு முன்பே ரஜனிகாந்த் நடித்த மற்றொரு படமான கபாலி படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியது. இதனால், இரண்டு படங்களிலும் ரஜனி மாறி, மாறி நடித்து வந்தார்.

கபாலி படத்தை முடித்த கையோடு சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் 2.0 படத்தின் படப்பிடிப்பு சில மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

ஓய்வுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பித்த 2.o படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வருடம் தீபாவளிக்கு இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.