Mar 27

நடுவானில் புகை: அவசரமாக தரையிறக்கப்பட்ட Air Canada விமானம்

67 நபருடன் சென்று கொண்டிருந்த Air Canada விமானம் இயந்திர கோளாறு காரணமாக Washington Dulles Airport அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை டொரண்டோவிலிருந்து புறப்பட்ட AC7618 என்ற விமானம் Washington Reagan National விமானநிலையத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.அப்போது, விமானத்திலிருந்து புகை எழுவதை கண்ட விமானிகள் உடனடியாக தரையிறக்க முயற்சி செய்தனர்.

எனவே Washington Dulles Airportல் அவசரமாகத் தரையிறங்கியது.இந்த சம்பவத்தில், பயணிகள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.இருப்பினும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக அமெரிக்காவின் மத்திய விமானப் போக்குவரவுத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.