May 20

இளவரசி டயானா தொடக்க விருதைப் பெறும் ஒன்ராறியோ இளம் பெண்

ஒன்ராறியோவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இளவரசி டயானா தொடக்க விருதை பெறுகின்றார். இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹரி ஆகியவர்களால் ஆரம்பிக்கப்பட்ட டயானா தொடக்க விருது உலகம் முழுவதும் உள்ள 20 இளவயதினருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

இவர்களில் ஒன்ராறியோவை சேர்ந்த 14 – வயது இளம் பெண் ஒருவரும் அடங்குகின்றார். வியாழக்கிழமை இந்த விருது வழங்கல் லண்டனில் அமைந்துள்ள  சென்ட். ஜேம்ஸ் மாளிகையில் இடம்பெற்றது.

வேல்ஸ் இளவரசி டயானாவின் ஞாபகார்த்தமாக இந்த விருது விழா ஆரம்பிக்கப்பட்டது.  உலகத்தை சிறந்ததாக மாற்றும் சக்தி இளைஞர்களிடத்தே உள்ளதென டயானா நம்பிக்கை வைத்துள்ளர்.

பீற்ற பொறோ ஒன்ராறியோவை சேர்ந்த வெயித் டிக்கின்சன் என்பவர் “Cuddles for Canada,”  என கண்டறியப்பட்டார். இப்பெண் ஒன்பது வயதாக இருக்கும் போது இவரது அத்தைக்கு மார்பக புற்று நோய் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இவர் “Cuddles for Canada”  என்ற அறக்கட்டளையை ஆரம்பித்து செயற்படுத்தினார்.

சிகிச்சையின் போது வெயித்தின் அத்தை மிகவும் குளிராக இருப்பதாக தெரிவிக்க வெயித் கம்பளி உரோம போர்வை ஒன்றை உருவாக்கினார்.

அன்றிலிருந்து கிட்டத்தட்ட 3,000 போர்வைகளை உருவாக்கியிருக்கிறார்.