Mar 27

பல விருதுகளை அள்ளி குவித்துள்ள மூத்த சுவிஸ் பாடகி காலமானார்

சுவிட்சர்லாந்தின் மூத்த பாடகியான Lys Assia வயது முதிர்வால் மரணத்தை எய்தியுள்ளார்.Rosa Mina Schärer என்ற இயற்பெயரோடு, 1924-ஆம் ஆண்டு பிறந்த Lys Assia-விற்கு தற்போது வயது 94 ஆகும்.நடன கலைஞராக தன் வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர், படிப்படையாக பாடகியாக உயர்ந்து பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்துள்ளார்.

"O Mein Papa" என்ற பாடல் மூலம் உலகப் புகழ்பெற்ற அலிஸா, 1956-ஆம் ஆண்டில் தொடங்கிய யூரோவிசன் பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் பரிசை தட்டிச் சென்ற முதல் சுவிஸ் பாடகி என்பது கூடுதல் சிறப்பு.

இந்நிலையில், வயது முதிர்வால் சூரிச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவரின் உயிர் கடந்த 24-ஆம் திகதி பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.