Mar 27

மாலிக்கு படைகளை அனுப்பவுள்ள கனடா மீது குற்றச்சாட்டு

அமைதி காப்பு நடவடிக்கைக்காக மாலிக்கு தனது படைகளை அனுப்பவுள்ள கனடா மீது, வெளிநாட்டு இராஜதந்திரிகள் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளனர்.

எதற்காக அமைதி காப்பு நடவடிக்கைக்காக மாலிக்கு தனது படைகளை கனடா அனுப்பவுள்ளது, அதன் தேவை என்ன என்பது குறித்த விளக்கத்தினை கனடா இதுவரை முன்வைக்கவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தெளிவற்ற தகவல்களை வெளியிடுவதன் காரணமாக, அல்லது தவறான தகவல்கள் பரப்பப்படுவதன் மூலம், இந்த நடவடிக்கைக்கு சாதாரண கனடியர்களின் ஆதரவு குறித்த அச்சுறுத்தல்கள் காணப்படுவதாகவும், குறிப்பாக முக்கிய நடவடிக்கை என்ற சொற்பதங்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐ.நா. அமைதி காப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆறு இராணுவ உலங்குவானூர்திகளை 12 மாதங்களுக்கு மாலிக்கு அனுப்பி வைக்கும் அறிவிப்பினை கனடிய மத்திய அரசாங்கம் அண்மையில் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது