May 20

11 – மாத வயதுடைய குழந்தையுடன் அவனது தாயாரையும் காணவில்லை: ரொறொன்ரோ பொலிசார் தேடல்

கனடாவின் ரொறொன்ரோ பகுதியில் இருந்து  11 – மாத வயதுடைய குழந்தை மற்றும் அவனது தாய் இருவரையும் காணவில்லை. இவர்களை ரொறொன்ரோ பொலிசார் தேடிவருகின்றனர். டவுன்ஸ்வியுவிற்கு அருகில் இவர்கள் கடைசியாக காணப்பட்டனர் எனக் கூறப்படுகின்றது.

வியாழக்கிழமை பிற்பகல் குறிப்பிட்ட பகுதியில் காணப்பட்டனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைலா சென்.லூயிஸ் வயது – 23  இவரது மகன் செவொன் சென்.லூயிஸ் ஆகிய இருவரும் வியாழக்கிழமை பிற்பகல் 2 – மணியளவில் செப்பேர்ட் அவெனியு மற்றும் அலன் வீதி பகுதியில் காணப்பட்டனரென கூறப்படுகின்றது.

மருத்துவ கவலைகள் மற்றும் வீட்டு பிரச்சனைகள் காரணமாக இவர்களை தேடவில்லை எனவும் குழந்தையின் நலன்கருதியே தேடுவதாகவும் 32 – வது டிவிசன் ஊழியர்கள் சார்ஜன்ட் சிபி 24 – விற்கு தெரிவித்துள்ளனர்.

சென். லூயிஸ் 5.2 – உயரம் நீல/கிரே கண்கள் மற்றும் சிவப்பு நிற முடி கொண்டவர். கடைசியாக அவர் இருண்ட நிற காற்சட்டை மற்றும் ஜீன் ஜக்கெட் அணிந்திருந்தார் எனக் கூறப்படுகின்றது.

ஷெவொன் நீலம் மற்றும் வெள்ளை கோடுகள் கொண்ட ஒட்டு மொத்த ஆடை அணிந்திருந்தான். தகவல் தெரிந்தவர்கள் 416 – 808 – 3200 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.