Mar 11

டெஸ்ட் அரங்கில் சாதித்தார் ரங்ண ஹேரத்

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில்  இலங்கை அணித்தலைலர் ரங்கண ஹேரத் 59ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ஹேரத் 79 டெஸ்ட் போட்டிகளில் 366 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இதில் 29 முறை 5 விக்கெட்டுக்கு அதிகமாகவும், 7 முறை 10 விக்கெட்டுக்கு அதிகமாகவும் வீழ்த்தியுள்ளார்.

முன்னதாக நியூசிலாந்து அணியின் இடதுகை  சுழற்பந்து வீச்சாளர் டானியல் விற்றோரி 113 டெஸ்ட் போட்டிகளில் 362 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார். 

இதுவே இடதுகை சுழல் பந்து வீச்சாளர் டெஸ்ட் அரங்கில் வீழ்த்திய அதிகூடிய விக்கெட்டுக்கள் என்ற சாதனையாகவிருந்தது.

தற்போது அந்த சாதனையை ரங்கண ஹேரத் முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.