Mar 26

சக ஊழியர்களின் நலனில் அக்கறை: ஆச்சரியத்தை ஏற்படுத்திய மருத்துவர்கள்

கனடாவில் சக ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.கனடாவில் மருத்துவத்திற்கான செலவு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

சிகிச்சை மட்டுமின்றி மருத்துவ படிப்பிற்கான கட்டணமும் கனடாவில் அதிகம் தான்.இந்த நிலை நீடித்தால் மருத்துவ துறையில் சேவை என்பதே இல்லாமல் போய்விடும் என்பதை உணர்ந்த மருத்துவர்கள், வித்தியாசமான போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

குறிப்பாக மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அதிகமாக இருப்பதாகவும் அதை குறைத்தால் மருத்துவ துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதன்படி, பொதுத் திட்டத்திற்கான அமைப்பின்(MQRP) தலைமையில் 500 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் ஊர்வலமாக நடந்து சென்று தங்களின் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

blockquote>அதில், “மருத்துவ நிபுணர்கள் மற்றும் சிறப்பு வல்லுநர்களுக்கான கூடுதல் ஊதியத்தை சமமாக பிரித்து மருத்துவத் துறையில் பணியாற்றும் இதர ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும்” என்பது முக்கியமான கோரிக்கையாக பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து MQRP தலைவர் Dr. Isabelle Leblanc கூறுகையில், “மருத்துவர்களுக்கான ஊதியம் உயர்த்தப்படும் அதே நேரத்தில் ஊதியம் குறைவாக இருப்பதாக செவிலியர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.</p><p>பணம் சரியான முறையில் கையாளப்படவில்லை. இதனால் ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் தான் சிரமப்படுகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.