Mar 26

30,000 அடி உயரத்தில் விமானத்தில் நடனமாடிய விமானி: வீடியோ இணைப்பு

லண்டனிலிருந்து ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தை இயக்கிய இரண்டு விமானிகள் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விமானமானது 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது ஒரு விமானி ஸ்னேப்சாட் விளையாட்டை விளையாடி கொண்டே உட்கார்ந்த இடத்திலிருந்து நடனம் ஆடியுள்ளார்.

பின்னர் தலைமை விமானியான மைக்கேல் செல்போன் ஆப்ஸ் மூலம் விதவிதமான கார்டூன் முகங்களை வரவழைத்து புகைப்படம் எடுத்துள்ளார்.

பின்னர் இதை சமூகவலைதளங்களில் மைக்கேல் வெளியிட அது வைரலாகியுள்ளது.குறித்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் கூறுகையில், பயணத்தின் போது விமானி நடனமாடியது அவரின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது.

இருவரும் விமான கட்டுப்பாட்டின் மீது கவனம் செலுத்தவில்லை, ஒரு நொடியில் எந்த விபரீதமும் ஏற்பட்டிருக்கலாம் என மிரட்சியோடு கூறியுள்ளார்.வீடியோவானது இதுவரை 6000-க்கும் அதிகமான முறை பலரால் பார்க்கப்பட்டுள்ளது.

விமானம் முழுவதும் பயணிகள் இருந்த நிலையில் விமானிகள் இப்படி மோசமாக நடந்து கொண்டதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளதுஇதையடுத்து இரண்டு விமானிகளும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் மீது ஒழுங்குமுறை நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது.