Mar 26

அநீதிகளுக்கு எதிராக ஒன்று திரளுங்கள்: போப் பிரான்சிஸ்!

அநீதிக்கு எதிராக, இளைஞர்கள் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டும் என போப் ஆண்டவர் பிரான்சிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

வாடிகன் புனித பேதுரு தேவாலயத்தில் நேற்று குருத்தோலை ஞாயிறு கூட்டுதிருப்பலி நடைபெற்றது. இதில் பங்கேற்று மறையுரையாற்றிய போப் ஆண்டவர் பிரான்சிஸ், அநீதிக்கு எதிராக, இளைஞர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

தற்கால இளைஞர்கள் சமூகத்தைப் பற்றி கவலைப்படாமலும், அக்கறையில்லாமலும் இருப்பதாக கூறிய போப் பிரான்சிஸ், இளைஞர்கள் எது குறித்தும் கேள்விகள் கேட்காமல் இருக்க, அவர்களை ஒருவித மயக்க நிலையிலேயே வைத்திருப்பதற்கான காரணிகள் திட்டமிட்டு ஏற்படுத்தப்படுவாதவும் குற்றம் சாட்டினார். எனவே சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக இளைஞர்கள் குரல் கொடுக்க வேண்டும் என போப் ஆண்டவர் பிரான்சிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.