Mar 26

பிரான்ஸ் தாக்குதலுக்கு கனடா கடும் கண்டனம்

பிரான்ஸில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இச்சம்பவம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல அப்பாவி மக்களின் உயிர்களைப் பறிக்கும் இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு நாம் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்.

கனடிய மக்கள் மற்றும் என் மனைவி சார்பாக இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

கனடா தொடர்ந்தும் பிரான்ஸூடன் இணைந்து பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பதற்கு சர்வதேச பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) பிரான்ஸ் பாரிஸில் டிரேப்ஸ் நகரிலுள்ள சூப்பர் மார்கெட்டில் தீவிரவாதிகளால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் பொதுமக்கள் நால்வர் உயிரிழந்திருந்ததுடன் பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.