Mar 24

சட்டமன்றத் தேர்தலில் பழமைவாத கட்சி வெற்றி பெறும் – கருத்துக் கணிப்பில் தகவல்

எதிர்வரும் ஒன்ராறியோ சட்டமன்றத் தேர்தலில், ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சி பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றி பெறும் என கருத்து கணிப்பொன்றில் தெரியவந்துள்ளது.

மயின்ஸ்றீட் றிசேர்ச் நிறுவனம் ஒன்ராறியோ மாநிலத்தில் வாக்களிக்கத் தகுதி உள்ள 2,003 பேரிடம் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

குறித்த கருத்து கணிப்பில், முற்போக்கு பழமைவாதக் கட்சிக்கு 47 சதவீதம் பேரின் ஆதரவும், லிபரல் கட்சிக்கு 26.2 சதவீதம் பேரின் ஆதரவும், புதிய சனநாயக கட்சிக்கு 6.4 சதவீதம் பேரின் ஆதரவும் பதிவாகியுள்ளன

அத்துடன் ஒன்ராறியோவின் அனைத்து பிராந்தியங்களிலும் பழமைவாதக் கட்சிக்கு அமோகமான ஆதரவு காணப்படுவதாகவும், ரொறன்ரோவுக்குள் 37.5 சதவீத ஆதரவு காணப்படுவதாகவும் கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன.

ரொறன்ரோ பெரும்பாக அளவில் நோக்கும்போது, பழமைவாதக் கட்சிக்கு 49.3 சதவீத ஆதரவு காணப்படுவதாகவும், இது லிபரல் கட்சிக்கு உள்ள ஆதரவுடன் ஒப்பிடுகையில் சுமார் 20 சதவீதம் அதிகம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒன்ராறியோவின் அனைத்து பிராந்தியங்களிலும் பழமைவாதக் கட்சிக்கு அமோகமான ஆதரவு காணப்படுவதாகவும், ரொறன்ரோவுக்குள் 37.5 சதவீத ஆதரவு காணப்படுவதாகவும் கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன.

ரொறன்ரோ பெரும்பாகத்தில் லிபரல் கட்சிக்கு 30 சதவீத ஆதரவும், புதிய சனநாயக கட்சிக்கு 12.7 சதவீத ஆதரவும், பசுமைக் கட்சிக்கு 5.4 சதவீத ஆதரவும் இந்த கருத்துக் கணிப்பின் போது பதிவாகியுள்ளன.