Mar 24

அமெரிக்க வர்த்தக பேரளார்கள் குழு கனடாவுக்கு விஜயம்

அமெரிக்க வர்த்தக பேரளார்கள் குழுவொன்று மூன்று நாட்கள் வர்த்தக பயணமாக அடுத்த வாரம் கனடாவுக்கு வரவுள்ளது.

அமெரிக்காவின் இன்டியானா மாநில ஆளுநர் எரிக் ஹொல்கோம்ப் தலைமையிலான குறித்த குழுவினர், இப்பயணத்தின் போது தலைநகர் ஒட்டாவா உள்ளிட்ட ஒன்ராறியோ மாகாணம் மற்றும் கியூபெக் மாகாணம் ஆகியவற்றுக்கு பயணிக்கவுள்ளனர்.

அத்துடன் மொன்றியல் நகரபிதா, ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின் ஆகியோர் உட்பட, கனேடிய அரசாங்க அதிகாரிகளுடனும் சந்திப்புக்களை நிகழ்த்தவுள்ளதோடு, கப்பல் துறை நிறுவன தலைவர்கள், விண்வெளி தொடர்பிலான நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்டோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

பின்னர் தங்களின் இந்த 3 நாட்கள் கனேடிய வர்த்தகப் பயணத்தை முடித்துக்கொண்டு எதிர்வரும் 27ஆம் திகதியுடன் அவர்கள் அமெரிக்கா திரும்புகின்றனர்.