Mar 24

பிரான்சில் பயங்கரவாத தாக்குதல்

பிரான்சின் தெற்கு பகுதியில் உள்ள கார்கசோனே நகரில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட்டிற்குள் பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்தினான். 

இதில் போலீஸ் அதிகாரி ஒருவர் காயம் அடைந்தார். தொடர்ந்து அவன், அங்கிருந்த சிலரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும், அந்த பகுதியில் நடந்த மற்றொரு தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாகவும் அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதனையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பொறுப்பேற்று கொண்டனர்.