Mar 23

சுவிட்சர்லாந்தில் பூனைகளுக்காக இயற்றப்படவிருக்கும் புதிய சட்டம்

கடந்தமுறை லாப்ஸ்டர்களை கொடுமைப்படுத்தக்கூடாது என்று சட்டம் இயற்றிய சுவிட்சர்லாந்து இம்முறை பூனைகள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக புதிய சட்டம் இயற்ற உள்ளது.

அதன்படி பூனைகள் எண்ணிக்கையில் அளவுக்கதிமாகப் பெருகுவதைத் தடுப்பதற்காகஅவைகளுக்கு கட்டாயக் கருத்தடை செய்வதை வலியுறுத்தும் திட்ட வரைவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

அத்திட்ட வரைவை வாக்கெடுப்புக்கு விடத் தேவையான 100,000 கையெழுத்துக்களை விட அதிகக் கையெழுத்துக்கள் பெறப்பட்டுவிட்டன.சுவிட்சர்லாந்தில் 100,000 முதல் 300,000 பூனைகள் வரை உள்ளதாக சுவிஸ் விலங்குகள் பாதுகாப்பு சங்கம் கணக்கிட்டுள்ளது.

இந்த சங்கத்தின் தலைவராகிய Esther Geisser, பூனைகள் பல பசியினாலும் நோயினாலும்துன்புறுவதாகத் தெரிவிக்கிறார்.தற்போதைய சுவிஸ் சட்டப்படி பூனைகளை வைத்திருப்பவர்கள் அவைகள் அளவுக்கதிகமாக பெருகாத வகையில் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பூனைகளுக்குக் கட்டாயக் கருத்தடை செய்ய பரிந்துரைக்கும் திட்ட வரைவைக் கொண்டுவந்தவர்கள் இந்த சட்டத்தை கடுமையாக்கவேண்டும் என விரும்புகின்றனர், அரசும் இதற்கு ஆதரவளித்துள்ளது.என்றாலும் இதை சட்டமாக்கமுடியுமா என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.