Mar 23

மகள் திருமணத்தை காண உயிரை கையில் பிடித்திருந்த அம்மா: அடுத்து நடந்த நெகிழ்ச்சி நிகழ்வு

கனடாவில் நோய்வாய்ப்பட்ட தாய் உயிரிழக்க சில நாட்களே இருந்த நிலையில் அவர் கண் எதிரிலேயே மகளின் திருமணம் நடைபெற்றுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றாறியோவை சேர்ந்தவர் ஜார்டன். இவருக்கும் செலிசா ஹார்பர் (24) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் ஆனது.

இவர்களுக்கு ஏழு மாதத்தில் ஜாக்சன் என்ற குழந்தையும் உள்ளது.ஜார்டனும், செலிசாவும் தங்கள் திருமண திகதியை இன்னும் முடிவு செய்திடாத நிலையில் செலிசாவின் அம்மா கிம் ஷிர்யுட்டுக்கு தீடீரென உடல் நிலை மோசமடைந்துள்ளது.

அங்குள்ள போர்ட் எரி மருத்துவமனை மருத்துவர்கள் கிம் ஒரு வாரம் தான் உயிரோடு இருப்பார் என கூறிவிட்டனர்.இதையடுத்து, தாய் தனது திருமணத்தை பார்க்க வேண்டும் என எண்ணிய செலிசா, கிம் சிகிச்சை பெற்று வரும் போர்ட் மருத்துவமனையிலேயே ஜார்டனை திருமணம் செய்ய முடிவெடுத்தார்.

ஜார்டன் தனது பேஸ்புக் பக்கத்தில் தனது நிலையை விளக்கி நண்பர்களை திருமணத்துக்கு அழைத்து பதிவிட்டதோடு, தங்கள் திருமணத்தை புகைப்படம் எடுக்க யாராவது வருவீர்களா எனவும் கோரியிருந்தார்.இதை பார்த்த விண்டி என்ற புகைப்பட கலைஞர் பணம் வாங்காமல் திருமண நிகழ்வை புகைப்படம் எடுக்க பரந்த மனதோடு ஒத்து கொண்டார்.

அதன்படி 24 மணி நேரத்தில் திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை ஜார்டன் - செலிசாவின் திருமணம் கிம் கண் முன்னால் நடைபெற்றது.மகளின் திருமணத்தை பார்த்து கிம் ஆனந்த கண்ணீர் வடித்தார்.இந்நிலையில் நேற்றிரவு கிம் உயிரிழந்து விட்டதாக தெரியவந்துள்ளது.