Mar 11

அரசியல் பொறிக்குள் மஹிந்த;இராஜாங்க அமைச்சர் நிரோஷன்

அரசியல் பொறிக்குள் மஹிந்த ராஜபக்ஷ் சிக்குண்டிருப்பதால் இரட்டை வேடத்தை கடைப்பித்து வருகின்றார் என இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் ஆகஸ்ட் 17ஆம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தல்வரைக்குமான 8மாத காலங்கள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையிலேயே அரசாங்கம் இருந்தது.

இதில் வியப்புக்குரிய விடயம் என்னவென்றால் அந்த காலப்பகுதில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் தனக்கு ஆதரவானவர்கள் என தெரிவித்து வந்த மஹிந்த ராஜபக்ஷ் குறைந்த பட்சம் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றையேனும் கொண்டுவராதமையாகும்.

நாடு பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரிவித்துவரும் மஹிந்த மற்றும் கூட்டு எதிர்க்கட்சி ஆரம்பமாக செய்யவேண்டியிருப்பது மாகாணசபைகளின் அதிகாரங்களை மாற்றியமைத்து அவற்றை வீழ்த்துவதாகும் 

எனவே மஹிந்த ராஜபக்ஷ் மற்றும் கூட்டு எதிர்க்கட்சி முடியுமானால் ஒரு மாகாணசபையையேனும் வீழ்த்தி அரசாங்கத்தை வீழ்த்த முயற்சி செய்யலாம் எனவும் குறிப்பிட்டார்.